தென் மாநிலங்களை போல வடக்கிலும் பாஜக புறக்கணிக்க சூழல் வரும் - அமைச்சர் பேட்டி

தென் மாநிலங்களை போல வடக்கிலும் பாஜக புறக்கணிக்க சூழல் வரும் - அமைச்சர் பேட்டி
Published on
Updated on
2 min read

கோவை மாநகராட்சி சிறைச்சாலை அணி வகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். குறிப்பாக அங்கு காவல்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்ட அவர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த துப்பாக்கி, உட்பட நவீன கருவிகளை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்அங்கு காவல்துறை உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக அங்கு அமைக்கப்பட்டுள்ள கோவை மாநகராட்சி பிரதான அலுவலக மாதிரி, கட்டிடம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கொரோனா நிதி உதவி மகளிர்க்கு பேருந்தில் இலவச பயணம் :

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சாமிநாதன், தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். கர்நாடகாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்பது தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான் என தெரிவித்த அவர் அதைத்தான் காங்கிரஸும் பாஜகவும் போட்டி போட்டு அறிவித்ததாக கூறினார். காங்கிரஸ் கர்நாடகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என தெரிவித்த அவர் மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் அரசாங்க திமுக அரசு உள்ளதாக தெரிவித்தார்

கடந்த முறை அமைக்கப்பட்ட பொருட்காட்சியின் மூலம் 36 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றது. இந்த பொருட்காட்சிகளின் மூலம் அரசு திட்டங்களை எவ்வாறு பெறுவது என்ற விவரங்கள் மக்களுக்கு தெரிய வரும். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பாஜக மதரீதியாக மக்களை மூளை சலவை செய்து ஆட்சியை பிடித்திருந்தார்கள். அதிலிருந்து மக்களுக்கு எப்போது தெளிவு கிடைக்கிறதோ பிஜேபிக்கு இதுபோன்ற சூழ்நிலை நிச்சயமாக ஏற்படும். அதற்கான காலம் துவங்கி இருப்பதாக எண்ணுகிறேன் என்றார்.

காங்கிரஸ் மீது நம்பிக்கை - பாஜக மீது அவமதிப்பு 

பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை எல்லாம் தான் காங்கிரஸ் கர்நாடகாவில் முன்னெடுத்து வைத்தது, அதன் காரணமாகத்தான் காங்கிரஸ் மீது மக்களுக்கான நம்பிக்கை வலுத்து, பிஜேபியின் மீது அவமதிப்பும் தேர்தலில் எடுபட்டது. தொடர்ந்து இதுபோன்ற நிலைமைகள் படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரும். தென்மாநிலங்களில் பாஜக புறக்கணிக்கப்பட்டது போல் விழிப்புணர்ச்சி ஏற்பட ஏற்பட வடக்கிலும் அந்த சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com