சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல்.. புதுச்சேரிக்கு வர இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - துணை நிலை ஆளுநர்  தமிழிசை பேட்டி

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல்.. புதுச்சேரிக்கு வர இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை  -  துணை நிலை ஆளுநர்  தமிழிசை பேட்டி

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று துணை நிலை ஆளுநர்  தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மீன்பிடித்துறைமுகத்தில் என்.சி.சி மாணவர்களின் சாகச பயணத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை இதனை தெரிவித்தார்.

கலாச்சார சீர்கேடு மற்றும்  இளைஞர்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்க மாட்டோம் என தமிழிசை உறுதியளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியில் குரங்கு அம்மை, ba4, ba5 போன்ற எந்தவித அறிகுறியும் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com