அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்து இணையத்தில் பதிவிட்ட நபர் கைது..!

அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்து இணையத்தில் பதிவிட்ட நபர் கைது..!

அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். 

சமூக வலைதளங்களில் பாஜக பிரமுகர் ஒருவர் தனது சமூக வலைதளங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கிருஷ்ணகிரி வருகையையொட்டி ‘Go Back Udhayanidhi Stalin’ என்ற ஹாஸ்டாக்கை  பரப்பி வந்த  நிலையில் திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுகவினர் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்தார். அப்போது, ‘Go Back Udhayanidhi Stalin’ என்ற ஹாஸ்டாக்  வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பாஜக மாவட்ட தலைவர் எம்.சி.முருகேசன் என்பவர் பகிர்ந்ததாக தெரிகிறது. 

இது குறித்து திமுகவினர் பாஜக பிரமுகரின் மீது பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த  புகாரின் பேரில், பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இன்னிலையில் இந்த சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் பர்கூர் அடுத்த BRG.மாதேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எம்சி.முருகேசன் என்பதும்,  அவர் பாஜக  மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருவதும் தெரிய வந்தது. 

பின்னர் அவரை பர்கூர் போலீசார் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த பாஜக மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், மாவட்ட பொருளாளர் கவியரசு மற்றும் பாஜக நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பர்கூர் காவல் நிலையத்தில் குவிந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட முருகேசன் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆதார் படுத்தி சிறையில் அடைத்தனர் இதனால் பாஜகவினர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com