ஆளுநரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட மாணிக்கம் தாகூர்...!

ஆளுநரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட மாணிக்கம் தாகூர்...!

தமிழ்நாடு ஆளுநரை விமர்சித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவை சிதைத்த கார்ல் மார்க்சின் சிந்தனை புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை பின்பற்றுவது மேற்கத்திய அடிமை மனநிலையை காட்டுவதாக உள்ளதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.

இதற்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், உங்களை நல்ல அறிவாளியாகவும், நல்ல போலீஸ் அதிகாரியாகவும் எண்ணியிருந்த எங்கள் கணிப்புகளை தவறாக்கி விட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com