சிறையிலிருந்து விடுதலையான தமிழ்நாட்டு மீனவர்கள் சென்னை வந்தனர்!

சிறையிலிருந்து விடுதலையான தமிழ்நாட்டு மீனவர்கள் சென்னை வந்தனர்!
Published on
Updated on
1 min read

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

கோடியக்கரை மீனவர்கள் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வைத்திருந்தனர். கோடியக்கரை பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 பேரும் மயிலாடுதுறை  மாவட்டத்தைச் சேர்ந்த  7 பேரும் காரைகால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும் என மொத்தம் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னைக்கு மீனவர்கள் வருகை

இந்நிலையில் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  23 தமிழ்நாட்டு மீனவர்களை இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை குடிவரவு சோதனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் வெளியே வருவதற்கு சுமார் 6 மணி நேரம் காலதாமதம் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று தனித்தனி வாகனத்தில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். செய்தியாளர்களிடம் மீனவர்கள் பேசி விடாத அளவிற்கு கொண்டு சென்றதால் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com