மேலூர் நகராட்சி, வள்ளாலபட்டி பேரூராட்சி மொத்தம் 146 வேட்பாளர்கள் போட்டி

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
மேலூர் நகராட்சி, வள்ளாலபட்டி பேரூராட்சி மொத்தம் 146 வேட்பாளர்கள் போட்டி

மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிட திமுக, அதிமுக, பாஜக, அமமுக என மொத்தம் 172 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

நிராகரிப்பு 4 மற்றும் வாபஸ் 73 என மறு பரிசீலனைக்கு பின்னர் 77 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலை நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஆறுமுகம் நேற்று அறிவித்தார்.

அதில் திமுக 26, அதிமுக 27, பாஜக 15, அமமுக 9, தேமுதிக 3, காங்கிரஸ் 1, நாம் தமிழர் 2 மற்றும் சுயேச்சைகள் 10 என மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே அ.வள்ளாலபட்டி பேரூராட்சியில் மொத்த முள்ள 15 வார்டுகளில் 78 பேர் விண்ணபித்திருந்த நிலையில் 27 பேர் திரும்ப பெற்றதையடுத்து திமுக 15, அதிமுக15, பாஜக 3, தேமுதிக 1, கம்யூனிஸ்ட் 1, நாம்தமிழர் 1, சுயேச்சைகள் 15 என மொத்தம் 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com