வரத்து அதிகரித்தாலும், விலை வீழ்ச்சியடைந்துள்ள அவல நிலை!!!

மேட்டுப்பாளையம் வாழைக்காய் மண்டிக்கு வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், கேரளா மாநில வியாபாரிகள் வராததால் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
வரத்து அதிகரித்தாலும், விலை வீழ்ச்சியடைந்துள்ள அவல நிலை!!!

மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு காரமடை நால்ரோடு பிரிவில் வாழைக்காய் மண்டி உள்ளது. மண்டிக்கு மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி ஆகிய பகுதிகள் மற்றும் புளியம்பட்டி, பவானிசாகர் வீரபாண்டி ஆகிய பகுதி களில் இருந்து 200-க்கு மேற்பட்ட விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

சுமார் 7,000 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தது. இது கடந்த வாரத்தை விடவிலை குறைவு. இன்றைய தினம்  ஏலத்தில் கதளி ஒரு கிலோ ரூ.50-க்கும், நேந்திரன் ரூ.47-க்கும், பூவன் ஒரு தார் ரூ.550-க்கும், செவ்வாழை ரூ.850 க்கும், தேன் வாழை ரூ600-க்கும், ரஸ்தாளி ரூ.500-க்கும், ரொபஸ்டா ரூ.400-க்கும்,  விற்பனையானது.

திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட் டங்கள் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளூர் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com