மாணவிகள் இனி அச்சமின்றி பள்ளிக்கு செல்லலாம்... காமக்கொடூர வாத்திகளை அல்லுதெறிக்கவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்...

தமிழகத்தில் உள்ள 2,87,467 வகுப்புறைகளில் குழந்தைகளுக்கு பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 ,14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மாணவிகள் இனி அச்சமின்றி பள்ளிக்கு செல்லலாம்... காமக்கொடூர வாத்திகளை அல்லுதெறிக்கவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்...

  பாலியல் துன்புறுத்தல் காரணமாக கோவை, கரூரில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மாணவிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச அழைப்பு எண் 1098 ,14417 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்களில் மாணவ, மாணவிகள் அச்சமின்றி அழைத்து புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேப்பாக்கத்தில் உள்ள லேடி வில்லிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தமிழகத்தில் உள்ள 2,87,467 வகுப்புறைகளில் குழந்தைகளுக்கு பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 ,14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபடும் என்றார்.

தற்போது மாணவர்களின் நோட்டு புத்தகங்களில் இந்த இலவச அழைப்பு எண்கள் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் இடம்பெற செய்யப்படும். பள்ளி கல்வித்துறை சார்பில் வரக்கூடிய கல்வியாண்டில் எல்லா புத்தகங்களிலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

 அரசு பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை போக்சோ சட்டம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இது தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தங்களுடைய பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என எண்ணாமல் பள்ளி நிர்வாகம், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய வகையில் செயல்பட வேண்டும். பள்ளிகள் முழுமையாக இயங்க துவங்கிய உடன் இதன் பலன் நமக்கு தெரியவரும்.

இந்த ஆண்டு பொது தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அமைச்சர் மகேஷ், மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் படித்தார்கள் என்கிற விவரம் இடம்பெறும் என்றார். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com