இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது... உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அமைச்சர் கருத்து...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி இன்ப அதிர்ச்சியாக உள்ளது, இந்த வெற்றி முழுக்க முழுக்க முதல்வரின் நலத்திட்ட உதவிகளுக்கு கிடைத்த வெற்றி என செய்திதுறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது... உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அமைச்சர் கருத்து...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது புகைப்பட கண்காட்சி அரங்கை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு கோவையில் மீட்பு துறை சார்பில் நடத்தப்பட்ட பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து செய்முறை விளக்கத்தை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுவாமிநாதன் கூறும் போது,

பொதுமக்கள் அரசு நிகழ்ச்சிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி வைத்துள்ளோம், இதை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர், செய்தி மக்கள் தொடர்பு துறையினருக்கு நன்றி. இன்று சர்வதேச பேரிடர் தினம் , இயற்கை மேலான்மை துறை சார்பில் பேரிடரின் போது எவ்வாறு மக்களை பாதுகாக்கின்றனர் என்பதை நிகழ்த்தி காட்டியுள்ளனர்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது அமையும் என தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின்  திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி  இன்ப அதிர்ச்சி. இந்த வெற்றி  முழுக்க முழுக்க முதல்வரின் நலத்திட்ட உதவிகளுக்கு கிடைத்த வெற்றி. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் போலி பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட இருக்கின்றது என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com