தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுவதே முதலமைச்சரின் லட்சியம்-ஐ.பெரியசாமி!

காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வரும் அவலத்தை தடுப்பதற்காகவே இந்த திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுவதே முதலமைச்சரின் லட்சியம்-ஐ.பெரியசாமி!

தமிழ்நாடு அரசின் திட்டமான ஆரம்ப பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து அமைச்சர் பேசினார்.

காலை உணவுத் திட்டம்

திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் உள்ள சவுராஷ்டிரா தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி, பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள்  காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வரும் அவலத்தை தடுப்பதற்காகவே இந்த திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

திண்டுக்கல்லில் மூன்று கல்லூரிகள்

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மூன்று புதிய அரசு கலைக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.   தமிழ்நாட்டை உலக அளவில் முன்னோடி மாநிலமாக மாற்றுவதே முதலமைச்சர் ஸ்டாலினின் இலட்சியம். அதற்கான சீரிய முயற்சியை தொடங்கியுள்ளார்.

பிற மாநிலங்கள் நம் தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை பின்பற்றி வருகிறது. முதலமைச்சரைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் சமம். இவ்வாறு  அவர் பேசினார். இந்த நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், மாநகராட்சி மேயர் இளமதி துணை ஆட்சியர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.