சினேகிதர்களாகவும் அமைச்சர்களாகவும் கைகோர்த்து புதிய கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்த அமைச்சர்கள்...!!!

சினேகிதர்களாகவும் அமைச்சர்களாகவும் கைகோர்த்து புதிய கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்த அமைச்சர்கள்...!!!

தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது.  அதனடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.  அந்த திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்க கூடிய மதிப்பீட்டுபுலம் முன்னோட்ட  காட்சி அரங்கம்,  14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை நவீன பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் புதிய கட்டமைப்பு வசிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.  இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

முன்னதாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளாகத்தில் புத்தக விற்பனை மையத்தை இரண்டு அமைச்சர்களும் கைகோர்த்து ரிப்பனை வெட்டி திறந்து வைத்துள்ளனர்.  மேலும் இந்த நிகழ்வில்  தமிழ்நாடு பாடநூல் கழக  தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பள்ளி கல்விக்கான அரசு   முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com