ராகுல் காந்திக்கு மோடி பயப்படுகிறார் - ரஞ்சன் குமார் கருத்து

ராகுல் காந்திக்கு மோடி பயப்படுகிறார் - ரஞ்சன் குமார் கருத்து

மோடி அரசு ஆணவத்தின் உச்சம்

கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசு ஆணவத்தின் உச்சத்தில் உள்ளர்கள் அதற்கு ராகுல் காந்தி விரைவில் சாவு மணி அடிப்பார் என காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி சிறை தண்டனை தொடர்பான போராட்டம் குறித்து காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இந்தியாவில் மோடி ஆட்சி தலைமையேற்ற நாள் முதல் ஜனநாயகம் கேள்வி குத்தாக உள்ளதாகவும் நாளை காங்கிரஸ் கட்சியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில்  அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறிய அவர் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த 4 துறை சார்பில் சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஆலோசனையில் அழைப்பு விடுக்க உள்ளோம் என கூறினார்.

மேலும் பேசிய அவர்,ராகுல் காந்திக்கு எதிராக மோடி பயந்து போய் உள்ளதாக விமர்சனம் செய்தவர் பெயருக்கு பின்னால் மோடி என்ற ஜாதி பெயரை வைத்துள்ளது அயோக்கியத்தனமான விஷயம் என்றும் மோடி சர்க்கார் என்று சொல்லும்போது அங்கே ஜாதி வரவில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர் அதானிக்கு கொள்ளையடிக்க மோடி உதவுகிறார் குற்றம் செய்பவரை விட குற்றத்திற்கு தூண்டுவரே முதல் குற்றவாளி அந்த வகையில் மோடி தான் முதல் குற்றவாளியே அதானிக்கு திருட துணை போனவர் தான் மோடி என்றும் அவரை குற்றவாளி என சொல்ல என்ன தவறு உள்ளதாக கேள்வி எழுப்பிய அவர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காமராஜர், ஜெயலலிதா, கலைஞர் போன்றவர்கள் எப்போதாவது அவர்கள் ஜாதியை பின்னால் சொல்லி உள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்தியை நேரடியாக சந்திக்க மோடி மற்றும் அமித்ஷவால் முடியவில்லை என்று பேசிய அவர் கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசு ஆணவத்தின் உச்சத்தில் உள்ளர்கள் அதற்கு ராகுல் காந்தி விரைவில் சாவு மணி அடிப்பார் என்று கூறிய அவர் மக்களுக்கு எந்த பிரச்சனைகள் இல்லாமல் எங்கள் போராட்டம் இருக்கும் என்றும் ரஜினி சொல்வது போல் இது வெறும் ட்ரைலர் தான், எங்கள் போராட்டம் சாலையில் இல்லை தெருக்களில் நடக்க உள்ளது மக்களை நேரில் சந்தித்து நாங்கள் மோடி குறித்து சொல்ல உள்ளோம் என்று பேசிய அவர் ராகுல் இனி மக்களிடம் பேசுவார், பாராளுமன்றத்தில் பேசுவதை வேண்டும் என்றால் அவர்களால் தடுக்க முடியும் என்றும்  மோடி என்ற ஜாதி பெயறை நீக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் மோடி அரசுக்கு எதிராக இந்திய மக்கள் மத்தியில் டீ கடை முதல் திண்ணை வரை மக்களிடம் நேரடியாக சென்று பேச உள்ளோம் என தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com