மோடி தலைமை: 8 ஆண்டில் பொருளாதார சரிவு - தொல். திருமாவளவன்

மோடி தலைமை: 8 ஆண்டில் பொருளாதார சரிவு  - தொல். திருமாவளவன்
Published on
Updated on
2 min read

பிபிசி ஆவணப்படம் தடை  - அடாவடி செயல்

பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை யாரும் பார்க்காதபடி தடை செய்து இணையத்தில் முடக்குவது கருத்துரிமை பறிக்கிற அடாவடி செயல், கண்டனத்துக்குரியது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை, முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை யாரும் பார்க்காதபடி தடை செய்து இணையத்தில் முடக்குவது கருத்துரிமை பறிக்கிற அடாவடி செயல், என கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது என்று சொன்னால் எல்லோரும் நகைப்பார்கள். எட்டு ஆண்டுகளில் மோடி தலைமையில் எவ்வளவு பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது என்று அனைவரும் அறிவார்கள். பணமதிப்பு வீழ்ச்சி அகல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி இருக்கிறது என்று சொல்வது அண்ட புளுகு ஆகாசப் புளுகு

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் மோடி 

மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டினார். அவரது உரை வன்முறைக்கு எதிராக இருந்தது என்று படம் பிடித்து காட்டி இருக்கிறது பிபிசி.

உண்மை அறியும் குழு தரவுகளைத் திரட்டி ஆவணப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது, உடனே அதை யாரும் பார்க்காதபடி தடை செய்வது இணையத்தில் முடக்குவது கருத்துரிமை பறிக்கிற அடாவடி செயல் மோடி அரசு பொதுமக்கள் பார்க்காமல் தடுப்பது கண்டனத்துக்குரியது.திரிபு வாதம்தான் சங்பரிவார்களின் முக்கிய அரசியல். நான் சொல்லும் கருத்து அரசியலை திரித்து பேசுவதை நடைமுறையாக பின்பற்றி வருகின்றனர்.

ரதி ராஜேந்திரன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com