அம்மா கை சமையல் தான் சிறந்த உணவு!- உணவுத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு!!!

திருச்சியில் நடந்த உணவு திருவிழாவில், பேசிய மாவட்ட ஆட்சியர், உலகிலேயே சிறந்த் ஔண்வு, தாய் கையில் சமித்த உணவு தான் எனக் கூறினார்.

அம்மா கை சமையல் தான் சிறந்த உணவு!- உணவுத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் பேச்சு!!!

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஒருநாள் உணவுத் திருவிழா நடைபெற்றது. அதில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பாரம்பரிய உணவு மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்பட்டது. மேலும், கலப்படங்களை எவ்வாறு கண்டறிவது போன்ற சில விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அரங்குகளும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து கண்டு ரசித்தனர்.

சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்:

மேலும் நிகழ்ச்சியில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு குறித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் உலக சாதனை நிகழ்வாக 1,12,102 பேர் கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து அதற்கான சாதனை சான்றுகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.

சிறந்த உணவு தாய் சமைத்த உணவு:

நிகழ்ச்சியில் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், உணவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் உணவு இட்லி என்றும் இதனை உலகத் தலைவர்கள் சாப்பிடுவதாகவும் போலியான தகவ்ல்கள் வெளியாகி வருவதாகக் கூரினார். மேலும் பேசிய அவர், “உணவுகளில் சிறந்த உணவு என்பது தாயார் கையில் சமைக்கப்படுவது தான். அவர் சமைக்கும் அத்தனை உணவும் சிறந்த உணவு தான்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு, மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.