பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை... 3 முதல் 5-ம் வகுப்புக்கு ரூ.500; 6 முதல் 12ம் வகுப்புக்கு ரூ.1,000...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை... 3 முதல் 5-ம் வகுப்புக்கு ரூ.500; 6 முதல் 12ம் வகுப்புக்கு ரூ.1,000...
Published on
Updated on
1 min read

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில், கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ரூ. 500-யும், 6ம் வகுப்பு பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ரூ.1000-யும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6ஆம் வகுப்புவரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்திற்காக நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ஊக்கத்தொகை வழங்க அஞ்சலகச் சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கிக் கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.72,000 என்ற அளவில் உள்ள மாணவியருக்கு மட்டும் ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com