அதிமுகவை நான்கு துண்டாக பிரித்த பெருமை மோடியை சாரும் எம்.பி சாடல்

அதிமுகவை நான்கு துண்டாக பிரித்த பெருமை மோடியை சாரும் எம்.பி சாடல்

4 துண்டாக பிரித்த பெருமை

விருதுநகர் அருகே மீசலூர் செவல்பட்டியில்  பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூபாய் 7.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டப்பட்ட கலையரங்கத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர்  
அதிமுகவை நான்கு துண்டாக பிரித்த பெருமை மோடியை சாரும் என்று கூறினார்.

பட்ஜெட் ஏழை மக்களில் வயிற்றில் அடிக்கிறது

ஏழை ,எளிய மக்களுக்கு குறிப்பாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பி இருக்கின்ற சாமானிய கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கிற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளது.100 நாள் வேலை  திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாயை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார்.
ஏழ்மையைப் பற்றியோ அதன் வலியைப் பற்றியோ உழைப்பவர்கள் பற்றியோ அவருக்கு எந்த ஒரு சிந்தனையும் இல்லை என்பதை மீண்டும் காட்டியுள்ளார்.

மேலும் மோடி கடந்த எட்டு ஆண்டுகளாக அதானிக்காக கடுமையாக உழைத்து உள்ளார். உலக பணக்காரர்கள் வரிசையில் 609 வது இடத்தில் இருந்து  இரண்டாவது இடத்திற்கு மாற்ற கடுமையாக உழைத்துள்ளார்.
அதானியின் நலனுக்காக செயல்படுகின்ற அரசாக இந்த அரசு மாறியிருக்கிறது.

 அதானி பற்றி திரு.ராகுல் காந்தி  பாராளுமன்றத்தில் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.ராகுல் காந்தி மற்றும் அதானி ஆகிய இருவரின் பெயர்களையும் உச்சரிப்பதை அவர் தவிர்க்கிறார்.ராகுல் காந்தியை உள்ளத்தாலும் உணர்வாலும் மோடி எதிர்க்கிறார்.ராகுல் காந்தி என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளர்  ஈ வி கே எஸ் இளங்கோவன் மிகப்பெரிய  வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்,  திமுகவின் நல்லாட்சியின் சான்றாக இந்த தேர்தல் வெற்றி இருக்கும், 

அண்ணாமலை பயத்தில் இலங்கைக்கு பயணம்

 அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுள்ளார், ஈரோடு பக்கமே தலைவைத்து படுக்காமல் இலங்கைக்கு சென்றுள்ள அண்ணாமலைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிகலா ,தினகரன்,ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ்.என அதிமுகவை நான்கு துண்டாக பிரித்த பெருமை பா.ஜ.க.வையே சேரும்.மோடியையே சாரும், அதிமுக தொண்டர்கள் மன்னிக்கக் கூடாத ஒரே கட்சி பா.ஜ.க.தான்.காங்கிரஸ்தான் அதிமுகவை  அழித்தது என மோடி பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். எப்போதும் பொய்யை பேசுபவராக இருக்கிறார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com