சென்னைக்கு வந்தார் குடியரசுத் தலைவர்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 8-வதுபட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பெங்களூருவில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற குடியரசுத் தலைவர் அங்கு ஓய்வெடுத்தார். இதையடுத்து உத்தண்டி சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 8-ஆம் ஆண்டு பட்டமளிப்பு  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார். 

இதையடுத்து, சென்னையில் இருந்து ராணுவ விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவரின் வருகையை யொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com