67 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊர் திரும்பும் நடராஜர் சிலை!

கும்பகோணம் அருகில் உள்ள சிவபுரம் சிவகுருநாத சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான  ஐம்பொன்னால் ஆன மூன்று அடி உயரம் உள்ள நடராஜர் சிலை இருந்தது. கடந்த 1958 ஆம் ஆண்டு இந்த சிலை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டது.

பல கட்ட போராட்டத்திற்கு பிறகு இந்த சிலை 1978 ஆம் ஆண்டு மீட்கப்பட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

1958 ஆம் ஆண்டு சிவபுரம் கோவிலில் இருந்து வெளியேறிய நடராஜர் சிலை இதுவரை அந்த கோவிலுக்கு செல்லவில்லை. 57ஆண்டுகளுக்குப் பிறகு  இன்று இந்த சிலை சிவபுரம் சிவகுருநாத சுவாமி ஆலயத்திற்கு   கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக இன்று காலை திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் இருந்து இந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நீதிபதி இந்த சிலையை சிவபுரம் கோவிலுக்கு கொண்டு செல்வதற்கான உத்தரவுக்காக இந்த சிலை தற்போது கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ளது.

தங்கள் ஊருக்கு இந்த சிலை 67 ஆண்டுகளுக்குப் பிறகு வருவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.