சென்னை, நாகை, கடலூர் உள்ளிட்ட துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுபெற்று ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே கடை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடலூர், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், காரைக்கால், நாகை, புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஏதும் விதிக்கப்படாததால் வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.