நாகையில் கிராம பெண்களிடம் அதிக வட்டி தருவதாக ஒரு கோடி ரூபாய் ஆட்டையப் போட்ட தனியார் நிதி நிறுவனம்...

நாகை அருகே கிராமப்புற பெண்களை குறிவைத்து  சிறு சேமிப்புக்கு அதிக வட்டி தருவதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தினர் 1 கோடி ரூபாய் பணத்தை  ஆட்டைய போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் கிராம பெண்களிடம் அதிக வட்டி தருவதாக ஒரு கோடி ரூபாய் ஆட்டையப் போட்ட தனியார் நிதி நிறுவனம்...

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல், திட்டச்சேரி,வேதாரண்யம், வேட்டைக்காரன் இருப்பு, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருவண்ணாமலைச் சேர்ந்த HGS DAIRIES AND AGRO LIMITED என்ற தனியார் நிதி  நிறுவனத்தினர், கிராம பெண்களை அணுகி, மாதம்  500 ரூபாய், 5 ஆண்டுகள் செலுத்தி வந்தால், முதிர்ச்சி அடைந்தவுடன்,30,000 ரூபாயுடன்  வட்டியாக 10,000 ரூபாயும், போனசாக 3 ரூபாய் என மொத்தம் 43,000 வழங்கப்படும் என ஆசை வார்த்தையை கூறி ஏஜெண்டுகளை நியமித்து 1000-க்கும் மேற்பட்ட  பெண்களிடம் 1 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளனர்.

இதனையடுத்து கிராம பெண்கள் அனைவரும் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் முதிர்ச்சி அடைந்ததை அடுத்து நிதி நிறுவனத்தை தொடர்பு பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் திட்டச்சேரி காவல் நிலையத்தில் தங்களின் பணத்தை நிதி நிறுவனத்திடம் இருந்து மீட்டு தர வேண்டும் என புகாரளித்துள்ளனர்.

இந்த புகாரை கிடப்பிலேயே காவல்துறையினர் போட்டு வைத்துள்ளனர். இதனையடுத்து ஆசை வார்த்தைக்கு மயங்கி பணத்தை இழந்த பெண்கள் அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க தங்களது பணத்தை மீட்டுக் கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com