கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்த படி, இன்று சிதம்பரம் பங்களா சாலையில் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை, கோவை, திருச்சியை தொடர்ந்து கடலூரிலும் முதல்முறையாக வார இறுதியை கொண்டாடும் விதமாக ’நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ' நம்ம ஸ்ட்ரீட் ' விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று கொண்டாடப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் அறிவித்திருந்தார். அதன் படி இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் பங்களா சாலையில் ’நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இசைக்குழுவினர், நடனக்குழுவினர் அமைக்கப்பட்டு உற்சாக நடன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை முதலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், போதைப்பொருள் குறித்த உறுதிமொழி, வாசகங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சினிமா பாடலுக்கேற்ப இளைஞர்கள் உற்சாக நடனமாடியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
.