நீலகிரி விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

நீலகிரி விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து 40 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சாலை விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து, அம்மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகம், அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பு மற்றும் மழை பாதிப்புகளில் இருந்து மீட்பு பணியை மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பம் மையத்திலிருந்து,  சாலை மார்க்கமாக 40 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் நீலகிரி பகுதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

இவர்கள் அப்பகுதியில் மலைச்சரிவு, வெள்ள பாதிப்பு, காற்று, மழையால்  ஏற்படும் சேதாரங்களில் இருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கை விடுத்து பேரிடர் நேரங்களில் விருந்து செயல்படுவதற்காக அதிநவீன கருவிகளுடன் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: தக்காளி விலை குறைவு!!

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com