“அவசியம் என்றால் டிடிவி தினகரனுடன்..விரைவில் சசிகலாவை..” ஓபிஎஸ் கூறியதென்ன?!

“அவசியம் என்றால் டிடிவி தினகரனுடன்..விரைவில் சசிகலாவை..” ஓபிஎஸ் கூறியதென்ன?!

அதிமுக பொதுக்குழு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றிய கேள்விக்கு மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், பட்ஜெட் குறித்த கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் வரும் 20-ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு, அதுகுறித்து கருத்து தெரிவிப்பதாக கூறினார். 

மேலும், வாய்ப்பு இருந்தால் அமமுகவுடனும், டி.டி.வி.தினகருடனும் இணைந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.  சசிகலாவை விரைவில் சந்திப்பதாக கூறிய அவர், இபிஎஸ்-ன் நடவடிக்கைகள் சட்டத்துக்கு புறம்பாக இருப்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொதுக்குழு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றிய கேள்விக்கு மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com