11 லட்சம் 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்...!!!

11 லட்சம் 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்...!!!

இச்சிபுத்தூர் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் 11 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில்,அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, இச்சிப்புத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்ட அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்,  இச்சிப்புத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் தனியார் கட்டிடத்தில் தற்போது செயல்பட்டு வருவதாகவும், 2022-2023ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் 11லட்சம் 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என்றும்,விரைவில் அரசின் சொந்த கட்டத்தில் அங்கன்வாடி மையம் செயல்படும் எனவும் பதிலளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com