புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது வாக்காளர் அடையாள அட்டை!

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது வாக்காளர் அடையாள அட்டை!

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இணையதளம் மூலமே பெற முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்கள், மூலம் மக்கள் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது. தற்போது, புதிய பாதுகாப்புகளுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இணையதளம் மூலமே பெற முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையின் உட்புறத்தில், ஹாலோகிராம், கோஸ்ட் இமேஜ், க்யூ ஆர் கோடு உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு மேல், இணைய சேவை மையங்களில், வாக்காளர் அடையாள அட்டைகளை பெற இயலாது எனவும்,  தேர்தல் ஆணையத்தின், இணையதளத்தில் விண்ணப்பிதன் மூலம், தேர்தல் ஆணையத்தின் மூலம் நேரடியாக பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டையை தடுக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர்கள், முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அட்டை விநியோகிக்கப்படும் எனவும், புதிய அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தேவையின் அடிப்படையில் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.