கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் கடந்த நவம்பர் மாதம் கோட்டைமேடு பகுதியில் கார் குண்டு வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ், இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கில் கைதான ஐவரையும் இன்று கோவை அழைத்து வந்த என்.ஐ.ஏ போலீசார், அவர்களது வீடுகளில் நேரில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.