சென்னை கடற்கரை - தாம்பரம்: அக்டோபர் 17 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு ரயில் இன்று முதல் வரும் 17 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் ரயில் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்ய்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணி 59 நிமிடத்திற்கு தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணி 40 நிமிடத்திற்கு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயிலும் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com