எத்தனால், மெத்தனால் மற்றும் பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் இல்லை!!

எத்தனால், மெத்தனால் மற்றும் பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் இல்லை!!

மத்திய அரசின் விதிமுறைகள் படி, எத்தனால், மெத்தனால் மற்றும் பேட்டரி நகங்களுக்கு அனுமதி கட்டணம் செலுத்த தேவையயில்லை என தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள், மெத்தனால் மற்றும் எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனால் வாகனங்களுக்கு எவ்வித அனுமதி கட்டணமும் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் தவிர, 3000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.