தலைவர்களுக்கு பரிசுப்பொருட்கள்:
இதுவரையிலும் கட்சி தலைவர்களோ அரசியல்வாதிகளோ இல்லை என்றால் பதவியில் உயர்ந்தவர்கள் , திருமணம், நண்பர்களுக்கு ஏதேனும் நற்செய்தி என்றாலே பலரும் அவர்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த வழக்கத்தினை வேண்டாம் என மறுக்கும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பரிசுகள் வேண்டாம் - புத்தகம் போதும்
இளைஞர் அணி செயலாளர் ஆகவும் அமைச்சராகவும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்பொழுது அன்பை வெளிப்படுத்தும் வகையில் பிளக்ஸ் வைப்பது பேனர் வைப்பது பட்டாசு வெடிப்பது வெள்ளி செங்கோல் வால் போன்றவற்றை நினைவு பரிசாக வழங்குவது மாலை அணிவிப்பது பொன்னாடை போற்றுவது போன்ற நடைமுறை தொடர்கிறது இவற்றை தவிர்க்கும் படி பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் இவை தொடர்வது வருத்தம் அளிக்கிறது.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி புத்தகங்களை வழங்குங்கள் அப்படி நீங்கள் எனக்கு அளிக்கும் புத்தகங்களை தேவைப்படும் பள்ளி கல்லூரிகளுக்கு வழங்குகிறோம்.