ஆளுநர் கேட்டதில் எந்த உரிமை மீறலும், தவறும் கிடையாது - வானதி சீனிவாசன்

தமிழ்நாடு ஆளுநர்  அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள மட்டுமே கோரிக்கை வைத்திருப்பதாகவும், இதில் எந்தவித தவறோ உரிமை மீறலோ இல்லை என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  

ஆளுநர் கேட்டதில் எந்த உரிமை மீறலும், தவறும் கிடையாது - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட இடையர் வீதி பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக கோவை  தெற்குத் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் குறைகளை கேட்கின்றேன். கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருக்கின்றது. மோசமான சாலைகளால்  விபத்துகள் ஏற்படுகின்றது.சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். இது குறித்து  என மாநகராட்சி அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம்.

தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஒரு சில பணிகள் துவங்கி இருக்கிறது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க சார்பில் கேரளாவிற்கு நிவாரண உதவிகள்  அனுப்பப்பட்டுள்ளது. சசிகலாவை வரவேற்பதும்,  வரவேற்காததும் அதிமுகவின் முடிவு. அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை.

ஆளுநர் மாநில அரசிடம் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக கோரிக்கை வைத்திருக்கிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கேட்டு இருக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. உரிமை மீறல்கள் இல்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது.இது வழக்கமாக நடப்பதுதான் எனக்கூறினார்.