எத்தகைய ரகசிய உடன்படிக்கை போட்டாலும் அதிமுகவிற்கு தாம் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று சசிகலா ஆவேசமாக கூறும் ஆடியோ வைரலாகி வருகிறது.
சென்னை மதுரவாயலை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகராஜ், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொன்னி கைலாசம் ஆகியோருடன் இன்று சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் அதிமுகவில் தற்போது நடக்கும் தவறுகள் எல்லாவற்றையும் தன்னால் சரி செய்ய முடியும் என்றும், செய்து காட்டுவேன் என்றும் சூளுரைத்திருக்கிறார்.
அதேபோல் எந்த ரகசிய உடன்படிக்கை போட்டாலும் தாம் வருவதை தடுக்க முடியாது என்றும் ,ஜெயலலிதா மாதிரி இந்த கட்சியை கொண்டு செல்வேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.