அதிமுக ஆட்சி பறிபோனதுக்கு காரணமானவர்களையே...திமுக அரசு ஏமாற்றிவிட்டது...செல்லூர் ராஜூ!

அதிமுக ஆட்சி பறிபோனதுக்கு காரணமானவர்களையே...திமுக அரசு ஏமாற்றிவிட்டது...செல்லூர் ராஜூ!
Published on
Updated on
1 min read

மதுரைக்கு  இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா :

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நேற்று இரவு மதுரை காமராஜர் சாலைப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் அமைச்சரும் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக :

அப்போது பேசிய அவர், திமுக பல்வேறு திட்டங்களை கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாத்துவது போல் தி.மு.க.வினர் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாத்திவிட்டனர். அதிமுக ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் அரசு ஊழியர்கள்  தான். ஆனால், அவர்களையும் திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்தார்.

இன்பநிதி காலிலும் விழுவார்கள் :

தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. ஆனால் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பறக்கும் பாலம் முதல் விரைவுச் சாலைகள் வரை பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருப்பதாக கூறினார். மேலும், அதிமுகவினரை காலில் விழுவதாகக் கேலி செய்த திமுகவினர் தற்போது உதயநிதியின் காலில் விழுகிறார்கள். இனி இன்பநிதி காலிலும் விழுவார்கள் என்று விமர்சித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com