உலக சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த சிறுவன்!

உலக சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த சிறுவன்!

குதிரை மேல் நின்று தொடர்ந்து 2மணி நேரம் 5 வகையான சிலம்பம் சுற்றி  5 வயது மழலை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

உலக சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ்வாணன்-உமா மகேஷ்வரி தம்பதியரின் 5 வயது சிறுவன் ரோகன்குமார். தனியார் சிலம்பம் பயிற்சி மையத்தில் கடந்த ஒரு வருடமாக சிலம்பம் பயின்று வருகிறார். சாதனை செய்ய வயது என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக குதிரை மேல் தொடர்ந்து இரண்டு மணி நேரம் 5 வகையான சிலம்பம் சுற்றி புதிய சாதனை செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சின்னவேடம்பட்டி கெளமார மடாலயம் பகுதியில் நடந்த சாதனை நிகழ்வில் மன்னர் காலங்களில் வீரர்கள் குதிரையின் மீது இருந்தே சிலம்பம் சுற்றி எதிரிகளை நிலை குலையச் செய்தனர் என்பது போல குழந்தையாக இருந்தாலும் குதிரையின் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். இந்நிகழ்வு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கான வளர்ப்பு குதிரையின் மீது நின்று சிலம்பம் சுற்றி பயிற்சி பெற்று இந்த சாதனை செய்துள்ளதாக கூறுகிறார் மழலை ரோகன்குமார்.

பயிற்சியாளர் பெருமிதம்

இது குறித்து பேசிய பயிற்சியாளர் திலிப்குமார் குதிரையின் மீது நின்று சிலம்பம் சுற்றிவது என்பது மிகவும் கடினமான ஒன்று. மன தைரியம் மற்றும் உறுதித்தன்மை இருந்தால் மட்டுமே இதனை செய்ய இயலும் அந்த சாதனையை இந்த மழலை சிறுவன் செய்துள்ளதாகவும் இதற்காக முறையான பயிற்சி அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் இதுபோல் தனது பயிற்சி மையத்தில் சிலம்பம் பயிலும் மாணவர்கள் சாதனை படைப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.