டெல்லி ஒன்றும் எங்களை இயக்கவில்லை: அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு - அரசியலில் மாற்றத்தை உருவாக்குமா ?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்
டெல்லி ஒன்றும் எங்களை இயக்கவில்லை:  அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு -  அரசியலில் மாற்றத்தை உருவாக்குமா ?

யார் எதிர்கட்சி

 தமிழ் நாட்டு அரசியலில் யார் எதிர்கட்சி என்கின்ற விவாதம் கடந்த சில மாதங்களுக்கு முன்னாடியை தொடங்கிற்று . அதில் நாங்கள் தான் எதிர்க்கட்சி என ஆளு ஆளுக்கு ஒரு பக்கம் கிளம்பிட்டாங்க. பல கட்சிகளும் இடம்பெற்றன. பாஜக, அதிமுக, பாமக என்று வரிசை கட்டிக்கொண்டு நின்றனர். 

அதுமட்டுமின்றி இபிஎஸ், ஓபிஎஸ் சேர்ந்து இருந்த காலங்கள் முதற்கொண்டு அதிமுகவை பாஜக தான டெல்லியில் இருந்து இயக்குகிறது எனவும், ஒவ்வொரு முறை டெல்லிக்கு போகும் போதும் ஏதாவது ஒரு வில்லங்கம் தமிழ் நாட்டில் அதிமுக சார்பில் நடக்கும். இல்லையைன்றால் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்.

 அதிமுக பிரிந்து பல அணிகளாக உருவாகிய பின்பும் கூட ஓ.பி.எஸ் தனியாகவும் டெல்லிக்கு போவதும், இ.பி.எஸ் தனியாக டெல்லிக்கு போவதும் பாஜகவிலிருந்து அரச நிகழ்விற்கு வருகை தருவதும் டெல்லியில் நடக்ககூடிய அரச விழாவிற்கு போவதும் மாற்றி மாற்றி அரசியல் களம் சூடுபிடிக்கும். 

நெல்லையில் தொண்டர்களுக்கிடையில் பேச்சு :

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி நெல்லையில் தொண்டர்களுக்கிடையில் பேசும் போது பாஜக கொள்கை வேறு அதிமுகவின் கொள்கை வேறு எனவும் பாஜக தேசிய கட்சி மட்டுமே என்றும் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி பாஜகவிலிருந்து அரசவிழாவிற்கு வருகை தருபவர்களை போய் பார்க்கவேண்டிய அவசியமில்லை எனவும் வெளிப்படையாக கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் கூறித்தும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளும் படியாக அழைப்பு விடுக்க பட்டியிருந்தது.

பாஜக அதிமுகவை இயக்கவில்லை 

அதுபோலவே இன்றைக்கு பேசிய எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சி அதிமுகவை எந்தவிதத்திலும் கட்டுபடுத்தவில்லை. 100 சதவீதம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று எப்போதும் வற்புறுத்தியதில்லை எனவும் கூறினார். போராட்டங்களை குறித்து கவலைக் கொள்ளாமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் . தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிராளிகளை வீழ்த்துவது உறுதிமக்களிடம்  செல்லுங்கள், மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் வாக்குறுதிகள் தவறியது உட்பட ஆளும் கட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினார்.


 அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குக - மாவட்ட செயலாளர்களுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம், அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தலைமை முடிவு செய்யும்.கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். கட்சி பணிகளை கிளை முதல் தொடங்குங்கள் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


ஓபிஎஸ் திமுகவின் பி டீம்

 ஓபிஎஸ் பணம் கொடுத்து ஆட்களை கூட்டி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தியுள்ளார்.கடந்த 18மாதங்களில் அதிமுக வளர்ச்சியடைந்துள்ளது.திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல துறைகளில் சாதனை படைத்தது எனவும்  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  அடுக்கு அடுக்கான குற்றங்களை எதிராளிகள் மீது வீசினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com