இனி தமிழில் கையொப்பம் இட அறிவுறுத்தல்..!

இனி  தமிழில் கையொப்பம்   இட அறிவுறுத்தல்..!

பள்ளிக் கல்வித் துறையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையின்  அனைத்து அலுவலகங்களுக்கும்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

" டிபிஐ வளாகம் தொடங்கி கடைநிலையில் அலுவலகம் வரை உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வருகைப்பதிவு, ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்திலும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும்", என்று அறிவுறுத்தப்பட்டது.

அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் இனிமேல் தமிழில் தான் கையெழுத்து போட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணை கடந்த 2021  ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், தற்போது பள்ளிகளில் உள்ள ஆவணங்கள், வருகைப்பதிவு என அனைத்திலுமே மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதை அனைத்து பள்ளிகளிலும் விரைவாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மாணவர்களிடம் தமிழை வளர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க    | ஊதியத்தை முதியோர் இல்லத்திற்கு வழங்கிய அதிமுக கவுன்சிலர்!