ஒடிசாவில் இரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தனருக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் உட்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமாா் 288 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் 900-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனா். இவர்களை மீட்க தமிழ்நாடு அமைச்சர்கள் குழு ஒடிசாவிற்கு விரைந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்
மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிப்பதாக தெரிவித்துள்ள அவர் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருகப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க:இந்திய இரயில்வேயும், விபத்துகளும்!