74 - வது குடியரசு தினத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவுக்கூறல்

74 - வது குடியரசு தினத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்  நினைவுக்கூறல்

74 - வது குடியரசு தினம்

ஒவ்வொரு வருசத்தின்   ஜனவரி -26  நாள் குடியரசு நாள் நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது. பொதுவாக  குடியரசு தினம் , சுதந்திரதினம் என்றாலே பள்ளிக்குழந்தைகளும் பெரியவர்களுக்கும்  உச்சியில் உரைப்பது கொடி ஏற்றுவதும், கலைநிகழ்ச்சிகளும், மிட்டாய் கொடுப்பதும், கிராம சபை கூட்டம் தான் முதலில் ஞாபகம் வரும். சுதந்திரதினம் கொண்டாடுவதற்கான காரணம் என்னவென்று கேட்டால் சுலபமாக சொல்லப்படும் அதே குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் பலரும் குழப்பநிலையில் பதில் கூறுவது கண்கூடு.

இந்தியா முழுவதும்  இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபின்பு இந்தியா குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாகவே குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குடியரசு தினம் :  இந்தியா முதல் குடியரசு தினத்தை ஜனவரி 26, 1950 அன்று கொண்டாட துவங்கியது. குடியரசு தினத்தின் அணிவகுப்பானது ராஜ்பாத்திலிருந்து தொடங்கி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் முழுமைபெறும். புதுடெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் மூவர்ணக்கொடியை ஏற்றிவைப்பார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமை 

அரசியலமைப்பு 1947 ஆக -28 தேதி நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக்குழு ஒன்றை உருவாக்கி அதன்  தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அம்பேத்கர் மற்றும் அவரது குழுவினர் இந்திய அரசியலமைப்பை 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்களில் உருவாக்கி கொடுத்தனர். அரசியலமைப்பு இரண்டு பிரதிகள் உள்ளன ஒன்று ஆங்கிலத்தில் மற்றொன்று இந்தியிலும் உள்ளது. அவை இரண்டுமே கையால் எழுதப்பட்டவை.  அரசியலமைப்பின் மூலங்கள் இந்தியாவின் பாராளுமன்ற இல்லத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகிறது ஜனவரி 24, 1950 ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட இரண்டு நிரந்தர அரசியலமைப்பும் கையழுத்திடப்பட்டது.

1950 முதல் இன்றைய காலக்கட்டம் வரையிலும் கிட்டதட்ட 94 திருந்தங்கல் செய்யப்பட்டுள்ளன். இந்திய நாட்டின் அரசியலமைப்பு தான் மிக நீண்ட மற்றும் எழுதப்பட்ட அரசியலமைப்பு. இதில் 444 கட்டுரைகள் 22 பகுதிகளாகவும் 12 அட்டவணைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் இந்திய  அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்திய அரசு சட்டம் 1935 பின்பற்றியது.இந்திய குடியரசு தினத்தில் கொடி ஏற்றுதல் விழாவின் போது, 21 குண்டு முழக்கம் செய்து மரியாதை வழங்கப்படுகிறது குடியரசு தின உரை இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படும்.

இந்திய குடியரசு தலைவரின் ( திரெளபதி முர்மு ) பேச்சு  - 2023

அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும். இதன்மூலம் அதற்கு இறுதி வடிவம் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த நாளில், நீதிபதி பிஎன் ராவின் பங்கையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆரம்ப வரைவைத் தயாரித்து, அரசியலமைப்பை உருவாக்குவதில் உதவிய மற்ற நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள்  நன்றி என கூறினார்.

ரதி ராஜேந்திரன் 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com