தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு கோடி பேர்: தமிழகம் அசத்தல்

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு கோடி பேர்: தமிழகம் அசத்தல்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் தடுப்பூசி மட்டுமே தீர்வாக அமையும் என்று மருத்துவர்களும், வல்லுநர்களும் தெரிவித்து வருவதால், நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 58 ஆயிரத்து 701 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு இதுவரை 91 லட்சத்து 46 ஆயிரத்து 680 கோவிஷூல்டு தடுப்பூசிகள் மற்றும் 18 லட்சத்து 93 ஆயிரத்து 550 கோவாக்ஸின் தடுப்பூசிகள் என மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 230 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், 1 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 20 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் மற்றும் சீரம் நிறுவனத்திடமிருந்து 4 லட்சத்து 97 ஆயிரத்து 640 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இன்று சென்னை வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் திட்டத்தின் கீழ் 42 புள்ளி 58 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களாக தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com