ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பயணிகள்

ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பயணிகள்

சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

இந்நிலையில் துபாயிலிருந்து இலங்கை வழியாக வந்த பயணிகள் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி தீவிர விசாரணை நடத்தினர்.

தங்கநகைகள் பறிமுதல்

அதன் பின்பு அவர்கள் உடமைகளை சோதித்த போது, அவருடைய சூட்கேசுகளுக்குள் ரகசிய அறைகள் வைத்து பெரும் அளவு தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தனர். இரண்டு பேருடைய சூட்கேஸ்களிலும், மொத்தம் ஒரு கிலோ 36 கிராம் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றின்  மதிப்பு ரூ.48 லட்சம். இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அதோடு கடத்தல் பயணிகள் இரண்டு பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் படிக்க: தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட அணில் குட்டி... பல்லி குட்டி.. குரங்கு குட்டி...

பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் வந்த அபூர்வ வகை உயிரினங்களை கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதை தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியதோடு, துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னைக்கு கடத்தி வந்த ரூபாய் 48 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்து, மூன்று  பயணிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.