"ஆபரேஷன் கஞ்சா 2.0".. டிஜிபி-யின் சூப்பர் மூவ்.. இரண்டு இடங்களில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்!

"ஆபரேஷன் கஞ்சா 2.0".. டிஜிபி-யின் சூப்பர் மூவ்.. இரண்டு இடங்களில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழகத்தின் இரு வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது இருபத்தேழரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒரு மாத காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வர ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பயனாக, சென்னை மதுரவாயலில் இரு சக்கர வாகனத்தில் 25 கிலோ கஞ்சா கடத்திய பிரபா என்கிற தக்காளி பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். விசாரணையில் பிரபாகரன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதேபோல், நெல்லை மாவட்டம் நாங்குநேரி நான்கு வழிச் சாலைப் பகுதியில் கஞ்சா தடுப்பு தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மறுகால் குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் இரண்டரை கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனைத் தடுப்பு சோதனை மேலும் தீவிரமாகும் என்றும் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com