தூய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு..! கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் ...!

தூய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு..! கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் ...!
Published on
Updated on
2 min read

தூய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

துப்புரவு பணியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆண்டு கணக்கில் தினக்கூலியாய் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்வது, நிரந்தர தொழிலாளர்களை வார்டு பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு  கையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரதிற்கு எதிராக உள்ள அரசாணை 152, 116, 139, 10ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அப்போது அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 இதைதொடர்ந்து மாநகராட்சி ஆணையாளரிடம் துப்புரவு பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.  

நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com