தமிழ்நாட்டிற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை...!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் மழைப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்றுமுதல் வரும் 25 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 23-ஆம் தேதி ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்றும், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com