அ.தி.மு.க வை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு: டிடிவி.தினகரன் அதிரடி

அ.தி.மு.க வை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க வை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு: டிடிவி.தினகரன் அதிரடி
Published on
Updated on
1 min read

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஈ.பி.எஸ்,ஒ.பி.எஸ் பிரதமரை சந்தித்திருப்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.அ.தி.மு.க வை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு என்றும் தேர்தல்,வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் பயணம் செய்கிறோம் என கூறினார்.

அ.தி.மு.க - அ.ம.மு.க இணையுமா என்கிற கேள்விக்கு யுகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள் என்றும் சுயநிலத்திற்காக வந்துவிலை போக கூடியவர்கள் விலை போகிறார்கள் என விமர்சனம் செய்தார்.

அ.தி.மு.கவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும் என்றும் முன்னாள் அமைச்சர்கள்  மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது குறித்தான கேள்விக்குஉப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான் என்றார்.

அ.தி.மு.க தொடங்கியது முதல் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,சிறைக்கு செல்லும் வரை சசிகலா என்கிற ஒற்றை தலைமையில் தான் அ.தி.மு.க இருந்தது.தற்போது அது மாறி உள்ளது.மீண்டும் அது சரியாகும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.தி.மு.க ஆட்சியில் என்ன மகிழ்ச்சியான விஷயம் என்பதை யோசிச்சு சொல்கிறேன்.எதையெல்லாம் எதிர்த்து போராடினார்களோ அதையையே அவர்களே தற்போது செய்கிறார்கள்.அவர்கள் சொன்னதை மறந்து அவர்களே செயல்படுகிறார்கள்.தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியை விட சிரிப்பு தான் உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com