வெளிமாநில தொழிலாளர்கள்: பொறாமையில் சிலர் வீண் வதந்தியை பரப்புகிறார்கள்...!

வெளிமாநில தொழிலாளர்கள்: பொறாமையில் சிலர் வீண் வதந்தியை பரப்புகிறார்கள்...!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஆடவர் கலை கல்லூரியில் 3.85 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் 900  நபர்கள் அமரும் இருக்கைகளுடன் கொண்ட 895 சதுர மீட்டர் பரப்பளவில் குளிர்சாதன வசதிகளுடன்  கட்டப்படும் கலையரங்கத்துக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா விதிகளை தொடர்ந்து கடைபிடித்தால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க முடியும் என்றும், வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். 

முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமையில் சிலர் வீண் வதந்தியை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com