இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள்...! இந்தியர்களுக்கு இரண்டாம் இடம்..!

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள்...!  இந்தியர்களுக்கு இரண்டாம் இடம்..!


இந்தியர்களுக்கு இரண்டாம் இடம்....
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: 
இலங்கை வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில்  எண்ணிக்கையில் இந்தியர்களுக்கு இரண்டாம் இடம் எனத் தகவல் ....

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் பெருந்தொற்று மற்றும் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பன சுற்றுலாத்துறையைப்  பெரிதும் பாதித்தன. 

தற்பொழுது வளர்ச்சி கண்டுவருவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் சுமார் 20 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதருவர் என்பது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்பார்ப்பாக உ ள்ளது. 

2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமும்   இலங்கைக்கு  ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.மார்ச் மாதத்தில்  மொத்தமாக   ஒரு லட்சத்து 25 ஆயிர்தது ,495 சுற்றுலாபயணிகள் வருகைதந்துள்ளதாக   சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்தில்   ரஷ்யா, இந்தியா மற்றும்  பிரிட்டன்,  ஜேர்மன், பிரான்ஸ், ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவிலான  சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை  விடுத்துள்ள அறிக்கையில் இந்த செய்தி  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளையில்,  இந்த ஆண்டில்  சுற்றுலாப் பயணிகளின் வருகை  15 இலட்சம் இருக்கலாம் என  எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அதன் எண்ணிக்கை 20 இலட்சமாக அதிகரிக்கக் கூடும் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை  தெரிவித்துள்ளது. 

இவ்வருடம் மார்ச் மாதத்தைப் பொறுத்தமட்டில் நாளாந்தம் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 4000 ஆகப் பதிவாகியுள்ளது. அதன்படி இவ்வாண்டு மார்ச் மாதம்  வரையான காலப்பகுதியில் (ஜனவரி - மார்ச்) நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 323,185 ஆக அமைந்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகமானது  இம்மாதம் (ஏப்ரல்) சீனாவில் சுற்றுலா ஊக்குவிப்பு செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும், அதன்மூலம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்களுக்கு இரண்டாம் இடம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com