"நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கலாம்" அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் நடந்தது. கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துக் கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில் ‘‘நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. முன்கூட்டியே நடந்தாலும் நடக்கலாம். இருளில் செல்லும் போது, வழியில் பாம்பு வரலாம் என்ற முன் யோசனையில், கையில் கம்பு எடுத்துச் செல்வோம். அதைப்போன்று எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசும் பொழுது "பிரதமர் மோடியே சொன்னார். நாடே வெட்கி தலை குனிகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது ஆச்சரியம் தான்,"என்று குற்றம் சாட்டியுள்ளார்.