ஆட்டோவில் இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்  

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், ஆட்டோவில் இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், புதிதாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.  

திமுக ஆட்சியில் எத்தனை சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற விகிதத்தை ஆராய்வதன் மூலம்  தமிழக பாஜகவின் 100 கோடி தடுப்பூசி கொண்டாட்டத்திற்கான பதில் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.