விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு…மக்களிடம் கருத்து கேட்டார் திருமாவளவன்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க 12 கிராமத்தைச் சேர்ந்த கிராமங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு…மக்களிடம் கருத்து கேட்டார் திருமாவளவன்!

காஞ்சிபுரம் மாவட்டம் பாரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

12 கிராமங்கள் அழியும் ஆபத்து

இதில் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர்,வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், சிங்கல்படி உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களைச் சந்தித்த திருமாவளவன்

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க 12 கிராமத்தைச் சேர்ந்த கிராமங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விலை நிலங்களுடன் குடியிருப்புகளும் அகற்றப்பட வாய்ப்புள்ளதாக அறிந்து  ஏகனாபுறம் மக்கள் தினம்தோறும் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நேரங்களில் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று 55 வது நாளக  ஏகனாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.