காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள்!

ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்தது.
காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள்!
Published on
Updated on
1 min read

சென்னை காசிமேட்டில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை வாங்க மீன் உணவுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று காசிமேட்டில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

நள்ளிரவு 2 மணி அளவில் ஏல முறை தொடங்கும் விற்பனை மொத்த வியாபாரிகள் சில்லற வியாபாரிகள் மீன் அசைய பிரியர்கள் விற்பனையில் மீன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.மீன்களின் விலை பொருத்தமட்டில் கடந்த வாரத்தை விட சற்று மீன்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

வஞ்சிரம் ஒரு கிலோ  1200

சங்கரா ஒரு கிலோ 400 முதல் 600 வரை
வவ்வால் ஒரு கிலோ 800 ரூபாய்
நெத்திலி ஒரு கிலோ 250 முதல் 350
இறால் ஒரு கிலோ 400 ரூபாய் 

என விற்பனை செய்யப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com