‘பெரியார்’ பேர் வைத்தாலே அடிப்போம்!!!- உணவகத்தின் மீதான தாக்குதலால் பரபரப்பு!!!

காரமடை கண்ணார்பாளையத்தில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் திறப்பு விழாவிற்காக காத்திருந்த உணவகத்தை 7 பேர் கொண்ட குழுவினர் அடித்து துவம்சம் செய்துள்ளனர்.
‘பெரியார்’ பேர் வைத்தாலே அடிப்போம்!!!- உணவகத்தின் மீதான தாக்குதலால் பரபரப்பு!!!
Published on
Updated on
1 min read

மேட்டுப்பாளையம் அருகே காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதி சேர்ந்தவர் சுந்தரம் மனைவி நாகராணி (38). இவரது மகன் அருண் (20). இவர்கள் இதே பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் இன்று கடை திறப்பதற்காக நேற்று முதல் கடையில் பணியாற்றி வந்தனர்.

அப்போது அங்கு வந்த சிக்கரம்பாளையம் காளட்டியூர் பகுதியை சேர்ந்த ரவிபாரதி (39), காரமடை காந்தி மைதானம் பகுதியை சேர்ந்த பிரபு (27), தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுனில் என்கிற சதீஷ்குமார் (32),  பெரிய வடவள்ளி பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (30), மங்களகரை புதூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (26) உள்பட 7 பேர் சேர்ந்து இவர்களது கடைக்குள் நுழைந்து இந்து அமைப்புகளுக்கு எதிராக பெரியார் செயல்பட்டவர்.

காரமடை சுற்றுவட்டார பகுதி இந்து அமைப்புகளுக்கான கோட்டையாக உள்ளது. ஆகவே இப்பகுதியில் தந்தை பெரியார் என்ற பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாகராணி, அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இவர்கள் 5 பேர் சேர்ந்து நாகராணி, அருணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் காரமடை கண்ணார் பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நாகராணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.மேலும் அருணுக்கு தலையில் அடிப்பட்டு 38 தையல் போடப்பட்டுள்ளது. இச்ச சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கூடுதலாக மேலும் இருவரை காரமடை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.மாலை 4 மணிக்கு காரமடை பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இச்சம்பவம் காரமடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com